உங்கள் EB எண் ஆதாருடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா? இந்த வழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்!

0
உங்கள் EB எண் ஆதாருடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா? இந்த வழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்!
உங்கள் EB எண் ஆதாருடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா? இந்த வழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்!
உங்கள் EB எண் ஆதாருடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா? இந்த வழிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்!

அனைத்து மின் நுகர்வோர் பயனர்களும் தங்களின் EB எண்ணுடன் ஆதார் நம்பரை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை சரியாக செய்துள்ளீர்களா என்பதை சோதிக்கும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் – மின் இணைப்பு:

மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மின் பயனர்களும் தங்களின் நுகர்வோர் எண்களை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் மானியம் போன்ற நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி தான் ஆதார் மற்றும் மின் இணைப்பிற்கான கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், உங்கள் ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண் இணைப்பு சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கான படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் எளிதாக செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் நாளை முதல் களைகட்ட போகுது.. நீங்களும் ரெடியா இருங்க – பொங்கல் பரிசின் டோக்கன் விநியோகம்!

Exams Daily Mobile App Download
சோதிக்கும் முறை:
  • முதலில், https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற TANGEDCOவின் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அந்த பக்கத்தில், ‘Enter Service Connection Number’ மற்றும் ‘Enter Registered Mobile Number’ என்ற TABகள் இருக்கும். அதில், EB சர்வீஸ் எண்ணையும், அதில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணையும் பதிவிட்டு SUBMIT கொடுக்க வேண்டும்.
  • இப்பொழுது திறக்கும் பக்கத்தில், உங்கள் மின் இணைப்பிற்கான அனைத்து விவரங்களும், பெயர், முகவரி உட்பட விவரமாக கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதில், கீழ் பகுதியில் AADHAAR என்ற பிரிவு கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதில், நீங்கள் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், CLICK TO LINK AADHAAR என்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்து இணைத்துக் கொள்ளலாம்.
  • ஒருவேளை, நீங்கள் ஆதார் மின் இணைப்பிற்கான நடவடிக்கையை தொடங்கி, மின்வாரியம் அதனை இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால், ‘YET TO BE APPROVED’ என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
  • ஆனால், நீங்கள் கொடுத்த ஆதார் – மின் இணைப்பு விண்ணப்பம் மின்வாரியத்தால் உறுதி செய்யப்பட்டால், அப்போது அங்கு ‘UPDATED’ என்று காண்பிக்கப்படும்.
  • இந்த செயல் முறையின் மூலம் உங்கள் ஆதார் – மின் இணைப்பு சரியாக உள்ளதாக என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!