இது எத்தனை பேருக்கு தெரியும்.. ஆதார் கார்டு மட்டும் போதும்.. வங்கி பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்!

0
இது எத்தனை பேருக்கு தெரியும்.. ஆதார் கார்டு மட்டும் போதும்.. வங்கி பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்!
இது எத்தனை பேருக்கு தெரியும்.. ஆதார் கார்டு மட்டும் போதும்.. வங்கி பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்!
இது எத்தனை பேருக்கு தெரியும்.. ஆதார் கார்டு மட்டும் போதும்.. வங்கி பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம்!

நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையை பயன்படுத்தி, உங்களது வங்கியில் இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஆன்லைன் இணைப்பு கட்டாயமில்லை. அது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் அட்டை:

இந்தியாவில் உள்ள மக்களுக்கு ஆதார் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆதார் அட்டை வெறும் அடையாள ஆவணமாக இல்லாமல், பல சேவைகளை பெற முக்கியமான ஆவணமாக இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது முதல், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை, மக்களுக்கு ஆதார் எண் கட்டாயமாகும். இந்நிலையில் ஆதார் எண், பான் கார்டை வங்கி கணக்குடன் இணைத்தால் தான், வங்கி சார்ந்த சேவைகளை பெற முடியும்.

அந்த வகையில் மக்கள் ஆதார் எண்ணை மட்டும் பயன்படுத்தி வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. 12 இலக்க ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்தி, எந்த ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைக்கும் செல்லாமல் உங்கள் வங்கிக் கணக்கு இருப்பை பார்க்கும் வசதி குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. UIDAI இன் இந்த வசதியை பெற நீங்கள் முதலில் ஆதார் அட்டையை, வங்கி மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

அதன் பின் இணைய இணைப்பு இல்லாமல் ஆதார் எண் மூலமாக வங்கி இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியானது மூத்த குடிமக்கள், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நேரடியாக வங்கிகளுக்கு சென்று அலையாமல் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது. ஆதார் எண் மூலமாக வங்கி இருப்பை தெரிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள்,

தமிழகத்தில் 27, 28ம் தேதிகளில் மின்தடை – பகுதிகள் குறித்த விவரம் இதோ!

முதலில் நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# ஐ டயல் செய்ய வேண்டும்.

அதில் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் சரிதானா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பின் UIDAIயில் இருந்து உங்களுடைய மொபைலிற்கு ஃபிளாஷ் SMS மூலம் வங்கி இருப்பு தொகை விவரங்கள் வரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!