TNPSC Fisheries Inspector தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது மீன்வள சார்நிலைப்பணியில் அடங்கிய மீன்துறை ஆய்வாளர் (மீன்வள மீனவ நலத்துறை) பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNPSC Fisheries Inspector தேர்வு தேதி:
Fishery Inspector பதவிக்கான கணினி வழித் தேர்வானது 08.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் 07 மாவட்ட தேர்வு மையங்களில் மட்டும் நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் 64 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
TNPSC Fisheries Hall Ticket 2023:
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.