Airtel பயனாளர்கள் கவனத்திற்கு… அட்டகாசமான நன்மைகளுடன் கூடிய திட்டங்கள் – இது தெரியாம இருக்காதீங்க!
ஏர்டெல் தனது பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோக்கள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களை இலவசமாக வழங்கும் திட்டங்கள் குறித்து விரிவாக இப்பதிவில் பார்ப்போம்.
ஏர்டெல் பிளாக் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் கூடுதல் பலன்களுடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெலின் ஒரு திட்டத்தின் கீழ் இரண்டு அல்லது பல சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கும் ஏர்டெல் பிளாக் என அழைக்கப்படும் திட்டத்தை குறித்து விரிவாக பார்ப்போம். இதனை தொடர்ந்து, ஏர்டெல் பிளாக் ரூ 1799 திட்டத்தின் கீழ் ஃபைபர், லேண்ட்லைன் மற்றும் 4 போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
தமிழக மாணவர்களுக்கு பிரதமரின் ஆலோசனை கேட்க அறிய வாய்ப்பு – தொலைபேசி எண் அறிமுகம்!
Follow our Instagram for more Latest Updates
அத்துடன், அன்லிமிடெட் அழைப்பு, ஃபைபர் இணைப்பில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைப்பதுடன், மொபைலில் 190 GB டேட்டா உள்ளிட்ட பலன்களும் கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் உள்ளிட்டவையும் கிடைக்கும். இதையடுத்து, ஏர்டெல் பிளாக் ரூ 1599 திட்டத்தில்,லேண்ட்லைன் ஃபைபர், டிடிஹெச்,அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
இதே போன்று, ஏர்டெல் பிளாக் 1099 திட்டத்தில் ஃபைபர், லேண்ட்லைன் மற்றும் டிடிஹெச் இணைப்புடன் வரம்பற்ற அழைப்பு, ரூ.350 மதிப்புள்ள டிவி சேனல்களும் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகிய நன்மைகளையும் பெற முடியும். மேலும் ஏர்டெல் பிளாக் ரூ 1098 திட்டம், ஏர்டெல் பிளாக் ரூ 899 திட்டம், ஏர்டெல் பிளாக் ரூ 699 திட்டம் ஆகிய திட்டங்களிலும் மேற்கண்ட பலன்களை பெற முடியும்.