Cinema-ல நடிப்பாங்கனு பார்த்தா இந்த முடிவ எடுத்துட்டாங்களே – முதல் கணவருக்கு முழுக்கு போட்ட ரட்சித்தா!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இருக்கும் நடிகை ரட்சிதா, பிரபல இயக்குனரை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பிக்பாஸ் ரட்சிதா:
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இந்த முறை ஆறாவது சீசன் தொடங்கப்பட்டு 21 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 100 நாள் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான கோப்பை வழங்கப்படும். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 21 போட்டியாளர்களில் ஒருவராக நடிகை ரட்சிதா களமிறங்கி இருக்கிறார். அவர் நிகழ்ச்சியில் அனைத்து டாஸ்குகளிலும் பங்குபெற்று யாருடனும் சண்டை போடாமல் இருந்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
மேலும் அவர் தன்னுடைய கணவர் தினேஷ் பற்றி பிக்பாஸ் வீட்டிற்குள் பேசி இருக்கிறார். அதில் தனக்கு திருமணம் முடிந்து 7 வருடம் ஆன நிலையில் கணவர் குடும்பம் குழந்தை பெற்றுக் கொள்ள சொல்லி வற்புறுத்தியதால் அவர் விவாகரத்து வாங்கியதாக தெரிவித்தார். மேலும் அவருக்கு கன்னட படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து அதிக பிரபலம் அடைந்துள்ளார். இதனால் தொடர்ந்து அவரை வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
அமுதவாணனை கோவப்படுத்திய அசிம்.. முட்டிக் கொண்ட சண்டை – “பிக்பாஸ் சீசன் 6” ப்ரோமோ ரிலீஸ்!
Follow our Instagram for more Latest Updates
ஆனால் நடிகைகள் பற்றி பிரபல நடிகர் பயில்வான் யுடியூப் சேனல் ஒன்றில் பேசி வரும் நிலையில், தற்போது ரட்சிதா இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக பேசி இருக்கிறார். அதாவது ரட்சிதா பிரபல இயக்குனரை காதலித்து வருவதாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும் போது அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவர் பேசி இருக்கிறார். இந்த செய்தி சின்னத்திரை வட்டாரங்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் வெள்ளித்திரைக்கு வருவார் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.