தமிழக பள்ளிகளில் விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளிகளில் 2022 – 2023-ம் கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் 1 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வு கடந்த வாரம் துவங்கியது. ஆனால் இந்த ஆண்டு பொது காலாண்டு தேர்வாக இல்லாமல் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. ஏனெனில் தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளத்தில் முன்கூட்டியே கசிவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும், வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் அந்தந்த பள்ளி அளவில் வினாத்தாளை தயாரித்துக் கொள்ளலாம் என்றும் தேர்வின் தேதிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
அதன்படி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு அதாவது முதல் பருவத்தேர்வு கடந்த 21ம் தேதி துவங்கியது. இந்த தேர்வு முடிந்த பிறகு 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும். அதே போல 6 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுமுறை தினங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனெனில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. இனிமேல் வேலை நேரத்தில் கைப்பேசிக்கு தடை!! அதிரடி உத்தரவு!!
Exams Daily Mobile App Download
அதனால் ஆசிரியர்கள் மற்றும் அதன் சங்கத்தினர் கோடை விடுமுறை பயிற்சி வகுப்பை ஈடு செய்யுமாறு விடுப்பு அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தற்போது காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 – 5ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 6 – 12ம் வகுப்புகளுக்கு அக். 10ம் தேதியன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க அக். 6,7,8 ஆகிய மூன்று நாட்கள் ஈடு செய்யும் விடுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்