DRDO நிறுவனத்தில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – 1900+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
DRDO கீழ் இயங்கிவரும் பணியாளர் திறமை மேலாண்மை மையம் (DRDO-CEPTAM) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Technical Assistant-B, Technician-A பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பணியாளர் திறமை மேலாண்மை மையத்தில் (DRDO-CEPTAM) Agriculture, Automobile Engineer, Chemistry போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Senior Technical Assistant-B பணிக்கு 1075 பணியிடங்களும், Technician-A பணிக்கு 826 பணியிடங்களும் என மொத்தமாக 1901 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது B.Sc Degree , 10 ஆம் வகுப்பு அல்லது ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 23.09.2022 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,12,4000/- வரை மாத ஊதியம் வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Trade Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்