அதிரடியாக சரிவை நோக்கி செல்லும் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், மக்கள் மத்தியில் நகை வாங்க ஆர்வம் அதிகமாகி வருகிறது. இந்த விலை குறைவால் நகை வாங்க மக்கள் கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தங்கத்தின் விலை:
மக்கள் மத்தியில் பெரும் சேமிப்பது என்பது இன்றளவும் தங்கம் தான். அந்த தங்கத்தை வாங்க மக்கள் தினமும் அதன் விலையை தொடர்ச்சியாக கண்காணிக்கிறார்கள். முதலீடு பொருளாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படுகிறது. இந்த விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கு காண்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,632க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.62க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பரவும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை? – அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. விலை தொடர்ந்து குறைந்து பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சனிக்கிழமை மாலை நிலவரப்படி தங்கம் கிராம் ரூ.4,640 ஆகவும், சவரன், ரூ.37,120 ஆகவும் இருந்தது. இந்த விலை குறைவு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்