தமிழகத்தில் பரவும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை? – அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் பரவும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை? - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பரவும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை? - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பரவும் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை? – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் சமீபத்தில் கடந்த சில வாரங்களாக புதிதாக புளு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கேள்விகள் எழுந்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. நேற்று 37ஆவது சிறப்பு மெகா கோவிட்- 19 தடுப்பூசி முகாம் 50,000 சிறப்பு இடங்களில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மட்டும் மொத்தம் 8.17 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்றைய முகாமில் 28,285 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,83,073 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும், 6,05,918 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று தி.நகர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அப்போது, அவரிடம் தமிழகத்தில் பரவி வரும் இன்புளூயன்ஸா காய்ச்சல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதிக அளவில் இன்புளூயன்ஸா காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்றும் கேட்கப்பட்டது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் புதிய பதவிகள் – அரசாணை வெளியீடு!

Exams Daily Mobile App Download

அதற்கு அமைச்சர், இதுவரை தமிழகத்தில் மொத்தம் 1044 நபர்களுக்கு இன்புளூயன்ஸா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், தற்போது மட்டும் 364 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் அவர்களை பெற்றோர்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், விரைவில் காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான சூழல் இப்பொழுது இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here