சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அசிஸ்டன்ட் வேலை – தேர்வு கிடையாது!
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (CBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Office Assistant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, ஊதியம், விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Central Bank of India (CBI) |
பணியின் பெயர் | Office Assistant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பணியிடங்கள்:
- தற்போது வெளியான அறிவிப்பில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (CBI) வங்கியில் காலியாக உள்ள Office Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Office Assistant கல்வி தகுதி: - அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் BSW, B.Com, BA Degree படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer, Accounts, Book Keeping ஆகியவற்றில் அடிப்படை அறிவு உடையவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வயது வரம்பு:
இந்த வங்கி பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Office Assistant சம்பளம்:
Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.12,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
Exams Daily Mobile App Download
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தேர்வு முறை:
Personal Interview மூலம் இந்த வங்கி பணிக்கு தகுதி உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Office Assistant விண்ணப்பிக்கும் முறை:
இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 30.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
Download Notification Link
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
No Comment
Give me the opportunity I am m.com completed m.com gold 🏅 medalist