கண்ணம்மாவை முழு மனதுடன் ஏற்று கொள்ளும் பாரதி – புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!
இத்தனை நாட்களாக ஹேமாவிற்காக தான் கண்ணம்மாவை விவாகரத்து செய்யாமல் பாரதி அமைதியாக இருந்தார். ஆனால், தற்போது கண்ணம்மாவை முழு மனதுடன் பாரதி ஏற்றுக் கொள்ளும்படியான புதிய திருப்பங்கள் வரை இருக்கிறது.
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே டிஆர்பி மதிப்பெண் பட்டியலில் முதலிடத்தை பிடித்து விடுகின்றன. அதிலும் முக்கியமாக முதல் மூன்று இடத்தை பிடிப்பது என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் தான். பல நாட்களாகவே பாரதியும் கண்ணம்மாவும் எப்போதுதான் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து ஒன்றாக சேர போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருந்தனர்.
ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கோபியை கண்டபடி அடிக்கும் பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!
ஆனால் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மாவை விட சீரியலில் அதிகமாக வெண்பா மற்றும் ரோஹித்தின் காட்சிகள்தான் காட்டப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கூட ரசிகர்கள் ஆர்வமாக பாரதி கண்ணம்மா தொடரை கண்டு ரசித்து வருகின்றனர். அதாவது கடந்த சில வாரங்களாகவே சம்பந்தமே இல்லாமல் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கண்டிப்பாக இந்த வாரம் டிஆர்பி மதிப்பெண் பட்டியலில் பாரதிகண்ணம்மா தொடர் சரிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 0.1மதிப்பெண் மட்டுமே குறைந்துள்ளது. அதாவது கடந்த வாரம் பாரதிகண்ணம்மா தொடர் 7.9 புள்ளிகள் பெற்று இருந்தது. இந்த வாரம் எப்படியும் பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல பாரதிகண்ணம்மா தொடர் முன்னிலையிலேயே தான் இருந்து வருகிறது. அதாவது இத்தனை நாட்களாக ரோஹித் கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு தேவையில்லாத காட்சிகளை காட்டி கொண்டிருந்தனர். இதற்குப் பிறகாவது பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையிலான பிரச்சினைகள் தீர்க்கப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.