10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.14,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!
தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Social Worker, Assistant Cum Data Entry Operator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) Social Worker, மற்றும் Assistant Cum Data Entry Operator ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது Graduate அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Social Worker பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- Social Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என DCPU நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.14,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.