Research Associate பணிக்கு ரூ.54,000/- ஊதியத்தில் வேலை – ஜூன் 17 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் (DRDO-DRL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Research Associates பணிக்கான பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (17.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
DRDO-DRL வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகத்தில் (DRDO-DRL) Research Associates பணிக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் Research Associates பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Biotechnology, Microbiology, Virology, Environmental Science, Chemistry, Polymer Science, Material Science, Textile Engineering, Horticulture போன்ற பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, அதிகபட்சம் 35 வயது என DRDO-DRL ஆல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் SC / ST பிரிவினருக்கு 05 வருடங்கள் மற்றும் OBC பிரிவினருக்கு 03 வருடங்கள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.54,000/- மாத ஊதியமாக பெறுவார்கள். இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நாளை (17.06.2022) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நாளை நடைபெற உள்ள நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் தவறாது இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.