ரூ.1,07,500/- ஊதியத்தில் IMSC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்..!
கணித அறிவியல் நிறுவனம் (IMSC) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Administrative Trainee, Library Trainee, Project Scientist Officer ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (25.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த பணி குறித்த அனைத்து விவரங்களும் கீழே மிக எளிமையாக தரப்பட்டுள்ளது.
IMSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Administrative Trainee பணிக்கு என 04 இடமும், Library Trainee பணிக்கு என 03 இடமும், Project Scientist Officer பணிக்கு என 01 இடமும் கணித அறிவியல் நிறுவனத்தில் (IMSC) காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
- Administrative Trainee பணிக்கு ஏதேனும் ஒரு Bachelor Degree, Library Trainee பணிக்கு MLISC Degree மற்றும் Project Scientist Officer பணிக்கு Science, Mathematics போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Project Scientist Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Research, Science Communication போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Administrative Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவராகவும், Library Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22 வயது முதல் 25 வயது வரை உள்ளவராகவும், Project Scientist Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
- Administrative Trainee, Library Trainee பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Project Scientist Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,07,500/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Typing Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
IMSC விண்ணப்பிக்கும் விதம்:
இந்த கணித அறிவியல் நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து Administrative Trainee பணிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், Library Trainee பணிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், Project Scientist Officer பணிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (25.05.2022) இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.