திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிக்கெட் விநியோகம் இன்று தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன்கள் இன்று (மே 21) முதல் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தற்போது தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் செய்யும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
தரிசன டிக்கெட்டுகள்:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதங்களில் பக்தர்கள் வருகை மறுக்கப்பட்டது. சுவாமிக்கு பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு அரசின் முயற்சியால் ஓரளவு கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இணையதளம் வாயிலாக மாதந்தோறும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஓரளவு பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மட்டும் நேரடி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த இலவச தரிசன டிக்கெட் கோயில் வளாகத்தில் 3 இடங்களில் விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. அதன்படி தற்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் டிக்கெட் பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- https://tirupatibalaji.ap.gov.
in என்ற இணையதளத்திற்கு செல்லவும். - அதில் உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP அனுப்ப வேண்டும்.
- அடுத்ததாக கேப்ட்சா குறியீட்டை பெற்று அதனை உள்ளிடவும்.
- அதன் பிறகு உங்கள் காலண்டர் ஓப்பன் ஆகும் அதில் உங்களின் வசதிக்கு ஏற்ப தேதிகளை தேர்ந்தெடுக்கவும்.
- அங்கு பச்சை நிறத்திற்கான வண்ணக் குறிப்பு கிடைக்கும். அது காலியாக இருக்கும் இடங்களை குறிக்கும் இதை வைத்து தேதியை முடிவு செய்யலாம்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்