ரூ.31,050/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
தகவல் தொடர்பு அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Consultant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
- Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் DOT / BSNL / MTNL போன்ற நிறுவனங்களில் பணி பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 63 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC Coaching Center Join Now
- Consultant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,050/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.