DOT மத்திய அரசு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.31,050..!
20.04.2022 அன்று தகவல் தொடர்பு அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை எளிமையாக கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Ministry of Communication, Department of Telecommunication (DOT) |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தகவல் தொடர்பு அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை பணியிடம்:
தகவல் தொடர்பு அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Consultant பணிக்கு என 04 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Consultant கல்வி தகுதி:
Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் ஏதேனும் ஒரு Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் AD/JTO level-ல் மற்றும் ஒத்த பணிகளில் பணிபுரிபவராக அல்லது பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Consultant அனுபவம்:
Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் DOT / BSNL / MTNL போன்ற நிறுவனங்களில் பணி பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Consultant வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 63 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
DOT ஊதியம்:
Consultant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.31,050/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
DOT தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
DOT விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவங்கள் 20.05.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.