சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் கேபி நிஜத்திலும் இப்படிபட்டவரா? அவரே கண்ணீர்மல்க அளித்த பேட்டி! வைரலாகும் வீடியோ!

0
சன் டிவி 'சுந்தரி' சீரியல் கேபி நிஜத்திலும் இப்படிபட்டவரா? அவரே கண்ணீர்மல்க அளித்த பேட்டி! வைரலாகும் வீடியோ!
சன் டிவி 'சுந்தரி' சீரியல் கேபி நிஜத்திலும் இப்படிபட்டவரா? அவரே கண்ணீர்மல்க அளித்த பேட்டி! வைரலாகும் வீடியோ!
சன் டிவி ‘சுந்தரி’ சீரியல் கேபி நிஜத்திலும் இப்படிபட்டவரா? அவரே கண்ணீர்மல்க அளித்த பேட்டி! வைரலாகும் வீடியோ!

தமிழை தனது மூச்சுக்கும் மேலாக நினைத்து சாதாரண பெண்ணாக இருந்த ஒருவர் டிக்டாக் செயலி மூலம் செலிபிரிட்டியாக வளர்ந்தவர் நடிகை கேப்ரியல்லா. தற்போது சன் டிவி சுந்தரி சீரியல் மூலமாக மக்களிடத்தில் சென்றடைந்து அதிக விருதுகளை வென்ற பெண்மணியாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்நது கொண்ட தகவல்கள் ரசிகர்களை வியக்கவைத்துள்ளது.

சுந்தரி சீரியல் கேப்ரியல்லா:

சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதை கனவாக கொண்ட கேப்ரியல்லா குழந்தை பருவத்திலிருந்தே சிவாஜி, சாவித்திரி படங்களை அதிகம் விரும்பி பார்த்து அதுபோன்று நடிக்க வேண்டும் என்று அந்த கதாபாத்திரமாகவே தன்னையும் நினைத்து தனது நடிப்பை வெளிக்கொணரும் வகையிலும், தமிழ் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்தும் வகையிலும் அதற்கு முதல் படியாக டிக்டாக் செயலியை பயன்படுத்திக்கொண்டார். அதில் அவர் கடிதம் படிக்கும் வீடியோக்கள் அதிக அளவு பிரபலமாகி, அதை தொடர்ந்து பல குறும்படங்களிலும் நடித்து அதற்க்கான அங்கீகாரத்தையும் பெற்றார்.

பிரபல நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி திடீர் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் 2022 விழாவில், இவருக்கு ஃபேவரைட் ஹீரோயின் விருது சுந்தரி சீரியல் மூலமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் அளித்த ஒரு பேட்டியில் தான் விருது பெற்ற போது அம்மா மற்றும் அம்மாச்சிக்கு மட்டுமே நன்றி சொல்லியிருப்பேன். ஏனென்றால் எனக்கு கல்யாணமாகி இரண்டு வருடங்கள் தான் ஆகிறது, ஆனால் எனது அம்மா தான் ஆரம்பக்கால சினிமா வளர்ச்சியில் இருந்தே கஷ்டத்திலும் கூட இருந்து என்னை பார்த்துக்கொண்டார்.

திடீரென எதாவது கிளாஸ் சேர வேண்டியிருக்கும். அது மாதிரியான நேரங்களில் செயினை அடகு வைத்து அம்மா காசு அனுப்பி வைப்பார். கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு மேல் அம்மா அனுப்பிய காசில் தான் என் தினசரி வாழ்க்கை ஓடியது. இவை அனைத்தும் எனது கணவர் ஆகாஷுக்கும் தெரியும், அதனால் தான் அவர் நீ அம்மாவை பற்றி சரியாக தான் சொன்னாய். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினார். மேலும், இந்த வருடம் சன் விருது விழாவில் சுந்தரி சீரியலுக்கு 13 அவார்ட்ஸ் கிடைத்துள்ளது. அதற்க்கு காரணம் சுந்தரி மட்டுமில்லை, ஒட்டுமொத்த சுந்தரி டீமும் தான்.

இவ்வாறு நான் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டையும் எப்பொழுதும் தனி தனியாக பிரித்து பார்த்ததில்லை. என்னை பொறுத்தவரை தன்னுடைய நடிப்பு மக்களிடத்தில் சேர வேண்டும் என்பது மட்டும் தான் . அந்த வகையில் இந்த வருட சிறந்த நடிகை விருது முழுக்க முழுக்க மக்களால் தேர்வு செய்யப்பட்டு அந்த விருது எனக்கு கிடைத்திருப்பது என்பது எனக்கான அங்கீகாரம். பொது இடங்களுக்கு செல்லும் போது சிலர் என்னிடம் வந்தது சுந்தரி கதை, தங்கள் வாழ்வுடன் ஒத்து போவதாக கூறி கண்கலங்கி அழுவார்கள். சில பெண்கள் கட்டி பிடித்து உரிமையுடன் பேசுவார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

 

என் நடிப்பை பார்த்து எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துட்ட பாப்பா என்று என அம்மா பாராட்டும் போது பெருசா சாதிச்ச சந்தோசம் கிடைக்கும். என் அம்மா எங்கு சென்றாலும் சுந்தரி அம்மா என்று தான் கூப்பிட்டு பேசுகிறார்கள். மொத்தத்தில் அவருக்கு பெருமை சேர்த்து விட்டேன் இந்த சீரியல் மூலம். மேலும், சுந்தரிக்கும், கேப்ரியெல்லாவிற்கும் நிறைய இடத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் முக்கியமாக குறிக்கோளை நோக்கி போகும் அந்த விஷயம். என்னை பொறுத்தவரை “தொழில் வாழ்க்கையில் எவ்வளவு தடை வந்தாலும் கல் மனதோடு இருந்து முன்னேறி செல்வேன்” என இறுதியாக பேசி முடித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!