பிரபல நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி திடீர் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

0
பிரபல நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி திடீர் மறைவு - திரையுலகினர் இரங்கல்!
பிரபல நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி திடீர் மறைவு - திரையுலகினர் இரங்கல்!
பிரபல நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி திடீர் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்த ரங்கம்மா பாட்டி நேற்று வயது முதிர்ச்சி மற்றும் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். அதனால் அவருடைய ரசிகர்கள் பலர் அவருக்கு இரங்கலை தெரிவித்து இருக்கின்றனர்.

பிரபல நடிகை மரணம்:

சினிமாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ரங்கம்மா பாட்டி. அவருக்கு தற்போது 83 வயது ஆகி உள்ள நிலையில், தற்போது வரை சினிமாவில் மவுசு குறையாமல் நடித்து வந்தார். சில நாட்களுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் படுக்கையில் இருந்தார். அவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களின் விவசாயி படத்தில் அறிமுகமாகி அந்த காலத்தில் இருந்த டாப் ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார். நடிகர் வடிவேலு உடன் அவர் நடித்த காமெடி காட்சிகள் மூலமாக ட்ரெண்ட் லிஸ்டில் இருக்கிறார்.

கோபி பற்றி உண்மையை தெரிந்து கொண்ட செழியன் – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!

இவர் சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தவர். தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களின் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். காஞ்சனா படத்தில் லாரன்ஸ் உடன் அவர் செய்யும் சேட்டைகளை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர்.

Exams Daily Mobile App Download

ஆனால் அவருக்கு ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக பலரிடம் உதவி கேட்டார். பின் லாரன்ஸ் அவருக்கு உதவி செய்தார். இந்நிலையில் அவருக்கு வயது முதிர்ச்சி மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக அன்னூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரது பிள்ளைகள் பராமரித்து வந்தனர். இந்நிலையில் அவர் நேற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படத்தை பகிர்ந்து இரங்கலை தெரிவித்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!