ஐலா பாப்பாவுடன் வளைகாப்பு விழாவில் டான்ஸ் ஆடிய ஆலியா – வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கு வளைகாப்பு நடைபெற்றது. அந்த வளைகாப்பு விழாவில் ஆலியாவும் ஐலா பாப்பாவும் டான்ஸ் ஆடும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆலியாவின் வளைகாப்பு:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்ததன் மூலமாக இருவரும் காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பாப்பா பிறந்த பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த போதே ஆலியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார்.
கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் ஆலியா சீரியலில் இருந்து விலகிக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கூட ராஜா ராணி தொடரில் நடித்துவந்தார். பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ரியா என்கிற புதுமுக நடிகை சந்தியாவாக நடிக்க ஒப்பந்தமானார். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் அர்ஷ் எனவும், பெண் குழந்தையாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி இரண்டாவது குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர்.
பாக்கியாவை இழுத்து சென்ற போலீசார், கண்ணில் சிக்காமல் தப்பித்த கோபி – இன்றைய எபிசோட்!
ஏற்கனவே ராஜா ராணி தொடரில் தொடர்ந்து நான் மட்டுமே சந்தியாவாக நடிப்பேன் எனவும் கூறியிருந்தார். ஆனால் பிரசவத்திற்கு பிறகு குழந்தையை கவனித்து கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் சீரியலில் இணைய மாட்டேன் என கூறியுள்ளார். ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கு வளைகாப்பு நடைபெற்றது. அந்த வளைகாப்பு விழாவில் ஆலியாவும் ஐலா பாப்பாவும் டான்ஸ் ஆடும்படியான வீடியோவை ஆலியா அவரது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.