விஜய் டிவி ”பாக்கியலட்சுமி” சீரியலில் மரணத்தின் விளிம்பில் ராமமூர்த்தி தாத்தா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி ”பாக்கியலட்சுமி” சீரியலில் மரணத்தின் விளிம்பில் ராமமூர்த்தி தாத்தா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி ”பாக்கியலட்சுமி” சீரியலில் மரணத்தின் விளிம்பில் ராமமூர்த்தி தாத்தா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி ”பாக்கியலட்சுமி” சீரியலில் மரணத்தின் விளிம்பில் ராமமூர்த்தி தாத்தா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாக்கியலக்ஷ்மி சீரியலில் அதிரடியான பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. பாக்கியாவை கோபி விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் ராமமூர்த்தி தாத்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் சரியாகி கொண்டு தான் இருந்தது. இந்நிலையில் தாத்தா இறந்து விட்டதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மரணத்தை தழுவிய தாத்தா:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. விஜய் டிவியில் பல்வேறு கதைக்களத்தில் சீரியல்கள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இது பெங்காலி சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியலில் ஒரு குடும்ப தலைவியின் உணர்வுகளை கூறும் விதமாக இந்த கதை அமைந்திருப்பதால் இது வீட்டில் இருக்கும் பெண்களை மட்டுமல்லாமல் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார். பாக்கியாவிற்கு தெரியாமலேயே அவரிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

பின்பு நீதிமன்றத்திற்கு பாக்கியாவை அழைத்து கொண்டு கோபி செல்கிறார். அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டால் வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்று பாக்கியாவை திரும்ப அழைத்து வந்துவிடுவார். கடந்த வாரம் கோபியுடன் ஒரு பெண் இருப்பதை எழில் பார்த்து தாத்தாவிடம் கூறுகிறார். இதற்கு மேலும் அமைதியாக இருந்தால் ராதிகாவை திருமணம் செய்து வீட்டிற்கே அழைத்து வந்தாலும் வந்துவிடுவான் என பயந்து பாக்கியாவும் கோபியும் இருக்கும் புகைப்படத்தினை எடுத்துக்கொண்டு ராதிகா வீட்டிற்கு கிளம்புகிறார். தாத்தா அந்த வீட்டிற்கு செல்வதற்குள் ராதிகா வீட்டையே காலி செய்துவிடுகிறார். இதற்கு பிறகு எழில் இயக்கியுள்ள முதல் படவிழாவிற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்றுள்ளனர்.

ஆனால் எழில் கோபியை மட்டும் அழைக்கவே இல்லை. இதனால் பாக்கியா மிகவும் கோவப்படுகிறார். ஏன் உன் அப்பாவை நீ அழைக்கவில்லை, இனிமேல் நீ என்னுடன் பேச வேண்டாம் கூறிவிடுகிறார். இதனை எழில் தாத்தாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அதாவது அப்பா, அம்மாவை ஏமாற்றி கொண்டிருக்கிறார். அது கூட தெரியாமல் அம்மா ஏமாந்து கொண்டிருக்கிறார் என எழில் கூறுகிறார். கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்து விடுவாரா, விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா என எதிர்பார்த்து கொண்டிருந்த நேரத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராமமூர்த்தி தாத்தா இறந்துவிடுவதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும் அந்த ப்ரோமோவில் எழில் செழியன் கோபி என அனைவரும் அதிர்ச்சி அடைய, பாக்யாவுக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. கோபி பற்றிய உண்மை இருவருக்கு மட்டும் தான் முழுமையாக தெரியும் எனவே இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!