Home news தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரத்தை தெரிவித்த கல்வித்துறை!

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரத்தை தெரிவித்த கல்வித்துறை!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரத்தை தெரிவித்த கல்வித்துறை!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரத்தை தெரிவித்த கல்வித்துறை!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? உண்மை நிலவரத்தை தெரிவித்த கல்வித்துறை!

2,381 அங்கன்வாடி மையங்களில் இயங்கி வந்த எல்.கே.ஜி, மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் மூட இருப்பதாக தகவல் வந்தது. அதற்கான விளக்கத்தை தற்போதைய பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

தமிழக அரசு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள்:

தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசு சாமானிய மக்களுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அந்த திட்டம் என்னவென்றால், அரசு நடுநிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி கூடங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளைத் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடிகளில் கல்வி பெற்ற 52,933 குழந்தைகளுக்கும் , எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை சோதனை செய்து ஆரம்பிக்க அரசாணையும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2019-2020 கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஓதுவார் பயிற்சி பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – மாணவர் படுகாயம்!

இதற்காக தரமான வகுப்பறைகளும் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த திட்டம், சென்னை போன்ற பெருநகரங்களில் பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு சீருடை, காலணி ஆகியவை அரசின் தரப்பில் வழங்கப்பட்டது. மேலும், எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு பாடம் எடுக்க தொடக்கக் கல்வி இயக்கம் சார்பில் அந்தந்த ஒன்றியங்களில் கூடுதலாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த அங்கன்வாடி கூடங்களில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிக்கூடங்களை நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான் கவனித்து பார்த்து கொள்ள வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் சமீபத்தில் பள்ளி கல்வி துறையின் சார்பில் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் தலைமை ஆசிரியர்கள் மழலையர் பள்ளியை சரியாக பார்த்து கொள்ளாதது தெரிய வந்தது. இதனால், இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என்று மாவட்ட கல்வித்துறை அலுவலகர்களுக்கு பேச்சு வாக்கில் உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்ச்சை வந்தது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் உலக நாடுகள் – முழு பட்டியல் இதோ!

இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு தெரிவிக்க தொடக்கக்கல்வித் துறை சார்பில் ஒரு விளக்கம் தரப்பட்டு உள்ளது. அது என்னவென்றால், அங்கன்வாடி செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகள் மூடப்படும் என்று வெளிவந்த தகவல்கள் முற்றிலும் தவறானது. இது தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மூடப்படாது. மேலும் அங்கு வகுப்புகள் நடத்த தேவையான ஆசிரியர்களை அந்தந்த பணியிடங்களில் நிரப்ப வேலைகள் நடந்து கொண்டு வருகிறது. விரைவில் அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here