தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை, அடுத்த 3 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை, அடுத்த 3 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை, அடுத்த 3 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை, அடுத்த 3 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் வருகிற மார்ச் 4 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலெர்ட் விடுத்து எச்சரிக்கை செய்து உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால், வரும், 3, 4ம் தேதிகளில், தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்’ என்றும் மேலும் ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கையும் விடுத்து உள்ளது வானிலை ஆய்வு மையம். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிவிப்பில் அவர் கூறியதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை மிதமான மழை பெய்யும்.

நகரம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு முக்கிய ஆலோசனை!

அதை தொடர்ந்து, நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், மிக கனமழை பெய்யும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில், கனமழை பெய்யும்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (மார்ச் 3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சென்னையை பொறுத்த வரையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 32 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலின் தென்கிழக்கு, அந்தமான் பகுதிகளில் இன்றும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் நாளை மழை பெய்யும் என்றும், தென் மேற்கு, மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் வரும், 3ம் தேதியும் தென்மேற்கு, தமிழக வடக்கு கடலோரம் மற்றும் ஆந்திராவின் தென் கடலோர பகுதிகளில் வரும், 4ம் தேதியும் மணிக்கு, 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இந்த நாட்களில், மீனவர்களுக்கு கடலுக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!