DRDO நிறுவனத்தில் 35+ காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலைவாய்ப்பு..!
DRDO DERL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 21.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
DERL வேலைவாய்ப்பு விவரங்கள்:
DRDO பணியிடங்கள்:
சமீபத்தில் வெளியாகிய அறிவிப்பின் படி Trade Apprentice பணிக்கென மொத்தம் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
DRDO கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
DRDO ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7,700/- முதல் ரூ.8050/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDO தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி (Merit) அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DERL விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு இறுதி நாள் (21.02.2022) நாளை என்பதால் இன்றே விரைந்து விண்ணப்பித்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.