தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் மழை இல்லாமல் கோடை வானிலேயே நிலவி வருகிறது. இந்த நிலையில் 10.02.2022, 11.02.2022 , 12.02.2022, 13.02.2022 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை 8 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகப்படியான மழை பெய்தது. இந்நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் காலை பொழுதுகளில் அதிக பனிமூட்டம் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து 10.02.2022 முதல் 14.02.2022 வரை தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
09.02.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
10.02.2022: தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
11.02.2022: தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
IND vs WI 2nd ODI: டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டிஸ் அணி – ரசிகர்கள் உற்சாகம்!
12.02.2022: தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
13.02.2022: இராமநாதபுரம், தூத்துக்குடி, இருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்கா௫, தேனி, இண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைவ 23 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும்.