IND vs WI 2nd ODI: டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டிஸ் அணி – ரசிகர்கள் உற்சாகம்!

0
IND vs WI 2nd ODI: டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டிஸ் அணி - ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI 2nd ODI: டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டிஸ் அணி - ரசிகர்கள் உற்சாகம்!
IND vs WI 2nd ODI: டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டிஸ் அணி – ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியா, வெஸ்ட் இண்டிஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2 வது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்:

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களம் இறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. இது இந்திய அணிக்கு ஆயிரமாவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுத்துறையில் 5000+ காலிப்பணியிடங்கள் – SSC அறிவிப்பு! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதனை தொடர்ந்து 2 வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது. சற்றுமுன் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து 2 வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு!

இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா(கே), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த்(வ), சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா

வெஸ்ட் இண்டீஸ் (பிளேயிங் லெவன்): ஷாய் ஹோப்(w), பிராண்டன் கிங், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன்(c), ஜேசன் ஹோல்டர், ஒடியன் ஸ்மித், அகேல் ஹொசைன், ஃபேபியன் ஆலன், அல்சாரி ஜோசப், கெமர் ரோச்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!