காது குத்து விழாவில் பிரச்சனையை கிளப்பிய மீனாவின் அப்பா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கயலின் காது குத்து விழாவில் குடும்பத்தினர் அனைவரும் சந்தோசமாக இருக்க, மீனாவின் அப்பா புதிய பிரச்சனையை கொண்டு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்ட கூட்டு குடும்பத்தை பற்றிய கதையாக இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணி வளைகாப்பு முதல் லட்சுமி அம்மா இறப்பு காரியங்கள் வரை வாழ்க்கை நடைமுறையில் உள்ள அனைத்தையும் கதையாக காட்டப்பட்டது. இந்த சீரியலில் தற்போது கயலின் காது குத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதன்முறையாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் குடும்பத்துடன் இணைந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இதுவாகும்.
சன் டிவி “ரோஜா” சீரியலில் அடுத்து வரும் திருப்பங்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
இதில் குடும்பத்தார் அனைவரையும் கூப்பிட்டுள்ளனர். முல்லை அப்பா, தனத்தின் அம்மா, தனத்தின் அண்ணன் ஜெகா, அண்ணி கஸ்தூரி என பலர் வந்திருக்கின்றனர். மீனாவின் சொந்தங்கள் பலர் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே தனத்தின் அண்ணா ஜெகாவிடம் தாய் மாமா சீர் நீங்க தான் செய்ய வேண்டும் என தனம் சொல்லி இருந்தார். கஸ்தூரிக்கு பிடிக்காமல் இருந்தாலும் அவர் சரி என சொல்லி இருந்தார். அதற்காக ஆட்டோவில் சீர் எல்லாம் கொண்டு வந்திருக்கிறார்.
OTT ‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் களமிறங்கும் டாப் போட்டியாளர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் நேற்று வெளியான ப்ரோமோவில் மீனாவின் அப்பா புதிய குழப்பத்தை கொண்டு வருகிறார். அவர் தனத்தின் அண்ணனை முறை செய்ய வேண்டாம் எனவும், மீனாவின் பெரியப்பா மகன் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளதாக சொல்கிறார். மீனாவின் அண்ணனும் மேளதாளத்துடன் வருகிறார். இதனால் தனமும் மூர்த்தியும் ஜெகாவை அவமானபடுவதை பார்த்து வருத்தப்படுகின்றனர். அடுத்து நிகழ்ச்சியில் என்ன பிரச்சனை வர இருக்கிறது என பார்க்கலாம்.