விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் அக்ஷரா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் வர இருக்கும் நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 11 வாரங்களை கடந்து மக்களின் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. அதில் போட்டியாளர்களின் குடும்பங்கள் வரும் உணர்ச்சிகரமான நிகழ்வுகள் அரங்கேறி இருக்கிறது. மேலும் அமீர் குடும்பம் மட்டும் வராமல் இருப்பதால் அவர் வருத்தத்துடன் அழுவது போல நேற்றைய எபிசோட் முடிக்கப்பட்டது. இன்றைய எபிசோடில் அவர்கள் வருவார்களா என எதிர்பார்த்து ரசிகர்கள் இருக்கின்றனர்.
TNUSRB கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – பிப்.1 முதல் பயிற்சிகள் துவக்கம்!
இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டு நாமினேஷனில் இருந்து பலர் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் பிரியங்கா, சிபி, பாவ்னி, நிரூப், வருண், அக்ஷரா ஆகியோர் தோல்வி அடைந்ததால் அவர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வார தலைவராக தாமரை இருக்கிறார். அமீர் தன்னுடைய வாழ்க்கை கதையை சொன்னதால் அவருக்கு அதிகமான மக்கள் ஆதரவு வந்துள்ளது. அதனால் அவர் இறுதி போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்க படுகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா செய்த சாதனை – டாப் 10 புதுமுக நாயகிகள் பட்டியலில் முதலிடம்!
மேலும் இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் வருவார். அவர் சொல்லும் அறிவுரைகள் போட்டியாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களில் இருந்து யாரு காப்பாற்றப்பட்டிருக்கார் என்பது குறித்து அவர் தெரிவிப்பார். தற்போது வெளியான தகவலின் படி குறைவான வாக்குகளுடன் அக்ஷரா வருண் இருப்பதாகவும், அவர்களில் அக்ஷரா வெளியேற்றப்படுவார் என தகவல் பரவி வருகிறது. மேலும் சனிக்கிழமை ஒரு எலிமினேஷன் மற்றும் ஞாயிற்றுகிழமை ஒரு எலிமினேஷன் இருக்கும் என தகவல் ஒன்றும் பரவி வருகிறது.