2022ம் ஆண்டு பள்ளிகளுக்கு 113 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் பட்டியல்!
கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து பள்ளிகளும் இயங்கி வருகிறது. மேலும் உத்தரப்பிரதேச மத்தியமிக் ஷிக்ஷ பரிஷத் அரசு பள்ளிகளுக்கான 2021-2022ம் ஆண்டின் விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
விடுமுறை நாட்கள்:
உலகம் முழுவதும் கொரோனா கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் முடக்கப்பட்டது. அனைத்து நாடுகளிலும் முழு ஊரடங்கு போடப்பட்டு அரசு நிறுவனங்கள் மாற்று தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு செயல்படாமல் இருந்தது. இதனை அடுத்து மாணவர்களின் நலன் கருதி அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. பின்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடந்தது. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்ததால் மாணவர்கள் அதிக மனசோர்வு அடைந்ததாக பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். கொரோனா தாக்கம் சற்று கட்டுக்குள் வந்ததால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் முதலில் துவங்கப்பட்ட சிறப்பாக இயங்கி வருகிறது. பின்பு நடுநிலை பள்ளிகளும் தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கான 2021-2022ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் ரிட்டன்ஸ்!
இந்த பட்டியலை உத்தரபிரதேச மத்தியமிக் ஷிக்ஷா பரிஷத் வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலின் படி 2022 ஆம் ஆண்டிற்கு 113 நாட்கள் விடுமுறைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் காலண்டர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 237 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களைப் பொறுத்தவரை, மாணவர்களுக்கு 113 நாட்கள் விடுமுறையாக இருக்கும். விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போர்டு தேர்வுகளுக்காக 15 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 22 ஆகும். மே 21 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். மாணவர்களுக்கு கோடை விடுமுறையின் கடைசி நாள் ஜூன் 30 ஆகும்.
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்!
உத்தரப்பிரதேச மத்தியமிக் க்ஷிக்ஷா பரிஷத் குளிர்கால விடுமுறை பட்டியலை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குளிர்கால விடுமுறை நாட்களை விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது . டிசம்பர் 31 முதல் குளிர்கால விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படும். குளிர்கால விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 15 முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் குளிர் காலத்திற்கான பள்ளிகளின் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும் உள்ளூர் விடுமுறைகளை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.