தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்!

0
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்!
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்!
தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று கூடுதலாக 150 பேருந்துகளும், இன்று 250 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு பேருந்துகள்:

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊருக்கு வந்து கொண்டாடுவதில் வெளியூர் சென்று வேலை பார்ப்பவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வாறு மக்கள் பண்டிகை நாளை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் சொந்த ஊருக்கு செல்ல உரிய வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

தமிழக அரசு அங்கன்வாடியில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – இன்றே கடைசி நாள்!

அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயிகள் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிறப்பு ரயில் சேவையானது வரும் ஜன.12ம் தேதி தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பொங்கலுக்கு முன்கூட்டியே செல்லும் விதமாக அரையாண்டு விடுமுறையை எதிர்பார்த்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அரையாண்டு விடுமுறை அறிவித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது முடிந்து ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

Vijay Hazare Trophy அரையிறுதி போட்டி – தமிழ்நாடு அணிக்கு 311 ரன்கள் இலக்கு!

அதனால் தங்களது சொந்த ஊருக்கு செல்லும் பயணத்தை நேற்று முதல் பெரும்பாலானோர் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு ஏற்ற வகையில் தமிழக போக்குவரத்து துறை வழக்கத்திற்கு மாறாக நேற்று முதல் பல சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து இன்று இன்னும் கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், மக்கள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் போக்குவரத்து துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!