விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் சிபியை காண வந்த மனைவி – வெளியான 2வது ப்ரோமோ!
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று நடைபெற இருக்கும் பிரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களை சந்திக்க அவர்கள் குடும்பத்தினர் வருகை தருகின்றனர். இதில் நடிகர் சிபி சந்திரனை காண்பதற்காக அவரது காதலி வருவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
தற்போது 80வது நாளுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி கடுமையான போட்டிகளுடன் களம் கண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் 20 நாட்களே மீதமிருப்பதால் ஒவ்வொரு போட்டியாளர்களும் பல்வேறு யுக்திகளை வகுத்து தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த வாரம் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுள்ள பிரீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் உற்சாகமாக காணப்பட்டு வருகின்றனர்.
பெண் தோழியுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்! ரசிகர்கள் ஷாக்!
ஏனென்றால் இதுவரை அடித்து, பிடித்து, சண்டையிட்டு வந்த போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தினரின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த அழகிய தருணங்கள் ப்ரோமோக்களாக வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைக்கான முதலாவது ப்ரோமோவில், அக்ஷராவின் தயார் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை சந்தித்தார். இதை தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் 2வது ப்ரோமோவில் சிபியின் காதலி பிக்பாஸ் வீட்டை விசிட் செய்திருக்கிறார்.
தன் பெயரை டாட்டூ போட்டுக்கொண்ட ரசிகரை திட்டிய சிவாங்கி – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
அந்த வகையில் கன்பெக்ஷன் ரூமில் இருக்கும் தனது குடும்பத்தாரை பார்ப்பதற்காக சிபி உள்ளே செல்கிறார். அங்கிருக்கும் காதலியை கண்டதும் உற்சாகத்தில் கட்டியணைத்து கொள்ளும் சிபி, எப்போது மும்பையில் இருந்து வந்ததாக கேட்டு விட்டு வெளியே அழைத்து வருகிறார். பிறகு தனது காதலியை சிபி மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைக்க போட்டியாளர்கள் அனைவரும் அவரை வரவேற்கின்றனர். இத்தகைய நெகிழ்ச்சியான தருணங்களுடன் வெளியாகி வரும் இந்த வார பிரீஸ் டாஸ்க் பல ஸ்வாரசியங்கள் நிறைந்ததாக காணப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.