பெண் தோழியுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்! ரசிகர்கள் ஷாக்!

0
பெண் தோழியுடன் 'குக் வித் கோமாளி' புகழ் வெளியிட்ட வீடியோ - இணையத்தில் வைரல்! ரசிகர்கள் ஷாக்!
பெண் தோழியுடன் 'குக் வித் கோமாளி' புகழ் வெளியிட்ட வீடியோ - இணையத்தில் வைரல்! ரசிகர்கள் ஷாக்!
பெண் தோழியுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் புகழ், ஒரு பெண்ணுடன் பைக்கில் செல்வது போல வீடியோ ஒன்றை ஷேர் செய்து மிஸ் யூ பார்ட்னர் என வெளியிட்டுள்ள பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் புகழ்

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு மக்களின் இதயத்திலும் இடம்பிடித்திற்கும் நகைச்சுவை மன்னன் புகழ் தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியின் ‘அது இது எது’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலாக திரைக்கு அறிமுகமான புகழை பலரும் பெண் வேடத்தில் நடிப்பவராக மட்டுமே அறிந்திருந்தனர். தொடர்ந்து ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நகைச்சுவையாளராக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற புகழின் ஆசை வெறும் கனவாகவே அமைந்தது.

தன் பெயரை டாட்டூ போட்டுக்கொண்ட ரசிகரை திட்டிய சிவாங்கி – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

என்றாலும் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து முயற்சித்து வந்த புகழை, புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான். தனக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கோமாளியாக அறிமுகமாகி தனது சிறப்பான நடிப்பால் எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார் புகழ். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் முன்னணி திரைப்படங்களில் நகைச்சுவை வேடமேற்று நடித்து வருகிறார் புகழ்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நாமினேட் ஆன சஞ்சீவிற்கு ஓட் செய்த விஜய் – நடிகரின் மனைவி நெகிழ்ச்சி!

இதற்கிடையில் நடிகர் புகழ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் பைக்கில் அமர்ந்து செல்வது போலவும், அந்த பெண் புகழின் தோள் மீது தயங்கியபடி கை போட முயற்சிப்பதும் பிறகு அவரது தோள் மீது கை போடுவதுமாக இருக்கும் வீடியோ ஒன்றை ஷேர் செய்து மிஸ் யூ பார்ட்னர் என்றும் ஒரு கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் புகழுடன் இருப்பது யார் என்கிற விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில், இது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!