தன் பெயரை டாட்டூ போட்டுக்கொண்ட ரசிகரை திட்டிய சிவாங்கி – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

0
தன் பெயரை டாட்டூ போட்டுக்கொண்ட ரசிகரை திட்டிய சிவாங்கி - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
தன் பெயரை டாட்டூ போட்டுக்கொண்ட ரசிகரை திட்டிய சிவாங்கி - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
தன் பெயரை டாட்டூ போட்டுக்கொண்ட ரசிகரை திட்டிய சிவாங்கி – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் பெயரை ரசிகர்கள் டாட்டூ போட்டுக் கொள்வதை விருப்பமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி சிவாங்கி தன் பெயரை டாட்டூ போட்டுக் கொண்ட ரசிகரை அக்கறையுடன் திட்டி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வைரல் வீடியோ:

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களுக்கு தற்போது அதிக அளவில் ஃபேன் பக்கங்கள் இருந்து வருகிறது. இந்த பக்கங்களை சம்பந்தப்பட்ட பிரபலங்களும் கவனித்து வருகின்றனர். ரசிகர்கள் தங்களின் ஃபேவரிட் நட்சத்திரங்களின் படங்களை கைகளால் வரைவது, அவர்களின் வீடியோக்களை எடிட் செய்து வெளியிடுவது போன்ற பல விஷயங்களை செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் ரசிகர்கள் தங்களின் அன்பின் வெளிப்பாடாக செய்து வருகின்றனர். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனவர் பாடகி சிவாங்கி.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நாமினேட் ஆன சஞ்சீவிற்கு ஓட் செய்த விஜய் – நடிகரின் மனைவி நெகிழ்ச்சி!

தனது இனிமையான குரலினால் பாடல்களை பாடி அதிக ரசிகர்களை பெற்று வந்தார். இந்நிலையில், தான் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக கொண்டார். மிகவும் வெகுளியான குணம் கொண்டவர் சிவாங்கி. இவரது குறும்புகளினால் தமிழகம் முழுவதும் செல்ல பெண்ணாக மாறிவிட்டார். சிவாங்கி பல தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். வெளிநாடுகளில்கூட சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இப்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

“வானத்தை போல” சீரியலில் சின்ராசுவாக களமிறங்கிய ஜீ தமிழ் பிரபலம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

சமீபத்தில் சிவாங்கி இன்ஸ்டாகிராம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் கலந்து கொண்ட வீடியோ மிகவும் ட்ரெண்டிங்கில் சென்றது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் சிவாங்கியின் ஓவியத்தை கைகளால் வரைந்து அதை அவருக்கு பரிசளித்தார். அப்போது அருகில் இருந்தவர், இவர் உங்கள் பெயரை டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார் என்று கூறியவுடன், ஏன் அப்டிலாம் செய்றீங்க? அதெல்லாம் வலிக்கும். இனி அப்படி செய்யாதீங்க என்று கூறி அக்கறையோடு திட்டி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர் மேல் சிவாங்கியின் அன்பை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதனால் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!