கோலாகலமாக நடந்த “பாரதி கண்ணம்மா” வெண்பா மகனின் பெயர் சூட்டு விழா – ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ் சின்னத்திரையில் இளம் வில்லியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பரீனா. அவர் தன்னுடைய மகனின் பெயர் சூடும் நிகழ்ச்சியை கோலாகலமாக பெரிய விழா போல நடத்தி இருக்கிறார்.
நடிகை வெண்பா:
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் பாரதி கண்ணம்மா வாழ்க்கையை பிரிக்கும் வெண்பாவை மையமாக வைத்தே கதை சென்று கொண்டிருக்கிறது. இளம் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் பரீனா நடித்து வருகிறார். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன் பின் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு முன்பு வரை சுக பிரசவத்திற்கு தேவையான உடற்பயிற்சி, யோகா செய்வது போன்ற பல வீடியோக்களை அவர் வெளியிட்டிருந்தார்.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினிக்கு நடந்த சோகம் – தவறவிட்ட முக்கிய பட வாய்ப்புகள்!
குழந்தை பிறந்த பின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருக்கும் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை இன்னும் வெளியிடாமல் இருக்கிறார். தற்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள தொடங்கிய அவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டே ஷூட்டிங்கிற்கு தயாராகிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அது பல பெண்களுக்கு ஊக்குவிப்பதாக இருந்ததால் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கண்ணம்மாவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட சீரியல் நடிகைகள் – வினுஷாவை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள்!
இந்நிலையில் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் தனது குழந்தைக்கு பிரம்மாண்டமாக பெயர் சூட்டும் விழா நடத்தி இருக்கிறார். அவரது குழந்தைக்கு வித்தியாசமான பெயர் வைக்க இருப்பதாக அவரது கணவர் பேட்டி ஒன்றில் தெரிவித்த நிலையில் தற்போது வெண்பா ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் இன்னும் சிறிது நேரத்தில் வெண்பாவின் குழந்தையின் முகத்துடன் அவரது பெயர் சூட்டும் விழா புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.