Today Current Affairs 14 December 2021 in Tamil 

0
Today Current Affairs 14 December 2021 in Tamil 
Today Current Affairs 14 December 2021 in Tamil 

Today Current Affairs 14 December 2021 in Tamil 

மனோஜ் முகுந்த் நரவனே புதிய ராணுவ மற்றும் முப்படைக்கு  தளபதியாக பதவியேற்றார்:
  • நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி ஜெனரல் எம்.என். நரவனே பதவியேற்றர்.
  • முப்படைகளின் முதலாவது புதிய தலைமை தளபதி பிபின் ராவத், அடுத்து ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார்.
  • முப்படைகளின் தலைமை தளபதி பொறுப்புடன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் Department of Military Affairs என்கிற ராணுவ விவகாரங்களுக்கான துறையின் செயலாளராகவும் அவர் பதவி வகிப்பார். Chairman Chiefs of Staff Committee-ன் நிரந்தர தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ஆலோசகர் ஆகிய பொறுப்புகளும் முப்படை தலைமை தளபதிக்கு உள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின்  மூலம் பாதுகாப்பு சாதனங்கள் உருவாக்கப்படுகின்றது:
  • மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல குறிப்பிடத்தக்க திட்டங்கள் மூலம் ஏராளமான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • 155 எம்.எம். பீரங்கி தனுஷ், பாலம் அமைக்கும் டேங்க், இலகு ரக போர் விமானம் தேஜஸ், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஆகாஷ் ஏவகணை, ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிகப்பல், ரோந்து படகுகள், ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், கண்காணிப்பு கப்பல், நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்கள், அர்ஜூன் கவச வாகனம், டி-72 பீரங்கி வானகங்களுக்கான தெர்மல் இமேஜிங் கருவிகள், அதிவிரைவு படகுகள், ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் காந்தேரி போர்க்கப்பல்கள், குண்டு துளைக்காத கவச வாகனம், லக்‌ஷ்யா பாராசூட் போன்றவை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன என்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் கூறியுள்ளார்.
  • முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து Department of Military Affairs என்பது அவருக்கு கீழ் கொண்டுவரப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் அறிவுப்பு :
  • 1முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
  • ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
  • 12 மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்டது” இல்லம் தேடி கல்வித் திட்டமாகும்”

முதல் முறையாக அதிக திறன் வாய்ந்த புதிய இயற்கை எரிவாயு காஸ் அடுப்பு உருவாக்கப்பட்டுள்ளது :
  • முதல் முறையாக குழாய்வழி இயற்கை வாயுவில் பயன்படுத்தும் வகையில், அதிக வெப்ப திறன் வாய்ந்த புதிய காஸ் அடுப்பை டேராடூனில் உள்ள  சிஎஸ்ஐஆர்.  இந்திய பெட்ரோலிய கழகத்துடன் இணைந்து பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு (c) உருவாக்கியுள்ளது.
  • குழாய்வழி இயற்கை எரிவாயுவை கையாளும் வகையில் இதன் பர்னர், ட்யூப் மற்றும் இதர அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • எல்பிஜி காஸ் அடுப்பு விலைக்கு இணையாக இந்த புதிய  காஸ் அடுப்பை பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு ஊக்குவிக்கிறது. இந்த புதிய அடுப்பை விற்பனை செய்ய இஇஎஸ்எல் நிறுவனத்திடம் பிசிஆர்ஏ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

‘லோக்பால் ஆன்லைன்‘ டிஜிட்டல் தளத்தை இந்திய லோக்பால் தலைவர் நீதிபதி பினாகி சந்திரகோஸ் தொடங்கி வைத்தார்:
  • புகார்கள் மேலாண்மைக்கான ‘லோக்பால் ஆன்லைன்‘ டிஜிட்டல் தளத்தை இந்திய லோக்பால் தலைவர் நீதிபதி பினாகி சந்திரகோஸ் தொடங்கி வைத்தார்.
  • இந்தத் தளத்தில் நாட்டின் அனைத்து குடிமக்களும் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் புகார்களை இந்தத் தளத்தில் தாக்கல் செய்யலாம்.
  • பொது சேவகர்களுக்கு எதிராக புகார்களை பராமரிக்கும் டிஜிட்டல் தீர்வாக லோக்பால் ஆன்லைன் இருக்கும் என்று நீதிபதி பினாகி சந்திரகோஸ் கூறினார்.
  • லோக்பால் அமைப்பின் உறுப்பினர் நீதிபதி அபிலாஷா குமாரி.
  • லோக்பால் செயலர் பி.கே.அகர்வால்.

அமெரிக்காவின் “படகோனியா” ஆடை வடிவமைப்பு நிறுவனம் காதி துணியை தேர்வு செய்துள்ளது:
  • உலகளவில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் ஆடை வடிவமைப்பு நிறுவனம் படகோனியா, ஆயத்த ஆடைகளை தயாரிப்பதற்கு கை நெசவால் உருவாக்கப்பட்ட காதித் துணியை இப்போது பயன்படுத்துகிறது.
  • உலகம் முழுவதும் காதித் துணியை வர்த்தகம் செய்ய அகமதாபாதில் உள்ள அரவிந்த் மில்ஸ் நிறுவனத்துடன் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் 2017 ஜூலையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இதன்பிறகு, குஜராத்தின் காதி கைவினைஞர்களின் கூடுதல் மனித நேரம் மட்டும் அதிகரிக்கவில்லை.பிரதமரின் “உள்ளூர் பொருட்களுக்கு உலகளாவிய சந்தை” என்ற  பிரதமரின் கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் பட்டியலில் தமிழகத்திற்கு 2-வது இடம்:
  • தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் பயனடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு.ராமேஸ்வர் தெலி மக்களவையில் கூறியுள்ளார்.
  • மத்திய அரசின் இந்தப் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 12,803 நிறுவனங்கள் மூலம் 5,35,615 பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுக்கு 2 விருதுகள் வழங்கியது ஒன்றிய அரசு :
  • தமிழ்நாடு அரசின் செல்பாடுகளுக்காக 2 விருதுகளை வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்துள்ளது.
  • தொற்றா நோய்களுக்காக 22.88 லட்சம் பரிசோதனை செய்ததில் இந்தியா அளவில் தமிழ்நாடு முதலிடம்.
  • ஆரோக்கிய வாழ்வை மேன்படுத்துவதற்காக 85,514 அமர்வுகளை நடத்தி தமிழ்நாடு அரசு 3ம் இடத்தில் உள்ளது.

வீரத்தாய் விருது பெற்ற   சுப்புலட்சுமி  அம்மா:
  • திருநெல்வேலியில் உள்ள வீரத்தாய் சுப்புலட்சுமி அம்மாக்கு  வீரத்தாய் விருது வழங்கிய ராணுவ அமைப்பு.
  • தாம் பெற்ற 3 மகன்களையும் ராணுவத்திற்கு அர்ப்பணித்த தாய்க்கு ராணுவம் சார்பில் வீரத்தாய் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

நீட் மற்றும் ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகளை கட்டணமின்றி எழுத செல்போன் செயலியை தேசிய தேர்வுகள் முகமை தொடங்கியுள்ளது:
  • நீட் மற்றும் ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள உதவிடும் வகையில் செல்போன் செயலியை தேசிய தேர்வுகள் முகமை தொடங்கியுள்ளது.
  • இணைய தளம் வாயிலாக உயர் தரத்திலான சோதனை தேர்வுகளை கட்டணமின்றி எழுத முடியும் என்று மக்களவையில் கல்வித்துறை இணையமைச்சர் திரு சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார்.
  • இதில் பதிவு செய்வதற்கான 14 லட்சத்திற்கு அதிகமான நீட் தேர்வர்களும், 9 லட்சத்திற்கும் அதிகமான ஜேஇஇ நுழைவுத்தேர்வு மாணவர்களும் விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார்:
  • நடப்பு உலக செஸ் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் துபாயில் நடந்த FIDE உலக சாம்பியன்ஷிப்பை வென்றார்.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த மாதம் நடைபெற்ற துபாயின் எக்ஸ்போ 2020 இல் நடைபெற்ற உலகளாவிய போட்டியில் வெற்றி பெற ஏழு புள்ளிகள் வரம்பை கடக்க தேவையான ஒரு புள்ளியை அவர் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சியை தோற்கடித்தார்.
  • கார்ல்சன் தனது ஐந்தாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். சாம்பியன்ஷிப் வழங்கும் 2 மில்லியன் யூரோ பரிசில் 60% கார்ல்சன் வென்றார்.

அபுதாபியில் 2021 F1 சாம்பியன்ஷிப்பை வெல்ல மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் லூயிஸ் ஹாமில்டனைக் கடந்து அபுதாபியில் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றார்:
  • மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் தனது முதல் உலக சாம்பியன்ஷிப்பை சீசன்-முடிவு அபுதாபி கிராண்ட் பிரிக்ஸில் வெற்றியுடன் உறுதி செய்தார், லூயிஸ் ஹாமில்டன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
  • வால்டேரி போட்டாஸ் ஆறாவது இடத்தைப் பிடித்தார் மற்றும் செர்ஜியோ பெரெஸ் ஓய்வு பெற்றார், மெர்சிடிஸ் தொடர்ச்சியாக எட்டாவது கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்பைப் பெற்றுள்ளது.

டிசம்பர் 14: தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்
  • தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
  • இந்த விழா 1991 ஆம் ஆண்டு முதல் மின்துறை அமைச்சகத்தின் தலைமையில் கொண்டாடப்படுகிறது.
  • பசுமையான மற்றும் பிரகாசமான எதிர்காலத்தைப் பெற இது சிறந்த வழியாகும் என்பதால், ஆற்றல் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!