மத்திய அரசின் விமான நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!
மத்திய அரசின் கீழ் செயல்படும் Alliance Air Aviation Limited நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. அதில் Manager, Manager/ Sr. Manager, AGM & DGM பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் கீழ்காணும் வயது வரம்பிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- Manager & Sr. Manager – 45 வயது
- AGM & DGM – 58 வயது
TNPSC Coaching Center Join Now
Alliance Air Aviation கல்வித்தகுதி :
- அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ Degree/ Master Degree/ CA/ ICWA/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இவற்றுடன் மேற்கூறப்பட்ட பணிகளில் போதுமான வருடங்கள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Alliance Air Aviation ஊதிய விவரம்:
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் Interview அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் 12.11.2021 அன்று வரை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் ஆனது தற்போது கடைசி தேதியினை எட்டியுள்ளது. எனவே இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.