‘பாரதி கண்ணம்மா’ முன்னாள் அகிலன் யார் தெரியுமா? சின்னத்திரை டூ வெள்ளித்திரை!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் முன்னதாக அகிலன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அகிலன். அவருடைய சினிமா பயணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாரதி கண்ணம்மா அகில்:
பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் நடித்தவர் அகிலன். சென்னையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். சிறு வயதிலேயே அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகமாக இருந்ததாம். அதனால் சென்னையில் அவர் படித்த எஸ்.ஏ கல்லூரியில் தான் விஜய் டிவி கனா காணும் காலங்கள் ஷுட்டிங் நடைபெற்றுள்ளது. அதை தினமும் பார்க்க அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. பின் படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மாடலிங் ஷார்ட் பிலிம் என பல திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.
விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய நடிகை வீணா வெங்கடேஷ் – காரணம் என்ன? அவரே வெளியிட்ட பதிவு!
மேலும் பல குறும்படங்களில் அவர் நடித்துள்ளார். சென்னையில் ஒரு மழைக்காலம், கேரமல் கண்ணே, உனக்கென நான், அடி பெண்ணே, RAA, கதிரும் நிலவும் போன்ற குறும்படங்கள் குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் நடித்ததற்காக Best actor male SIIMA விருது கிடைத்தது. மாடலிங் செய்துகொண்டு பல விளம்பரங்களில் நடித்து வந்தார். ஷார்ட் பிலிம்களில் நடித்ததால் கிடைத்த பாப்புலாரிட்டி அவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவி புதிய ‘கண்ணம்மா’ வினுஷா யார் தெரியுமா? முக்கிய தகவல்கள்! ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?
இவர் தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்தார். அதன் பின் இறைவி,பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவருக்கு அதிகமான படவாய்ப்புகள் வருவதால் அவரால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அதனால் அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தற்போது விலகி இருக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் 500 எபிசோடுகளுக்கு மேல் நடித்து சீரியலின் வெற்றிக்கு இவரும் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.