‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் தீபாவளி கொண்டாட்டம் – வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படங்கள்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நீண்ட நாட்கள் கழித்து தற்போது ஒரு கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சில படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கடந்த சில நாட்களாக மந்தமாக நகர்ந்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டுமாக ஒரு கொண்டாட்ட நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. இதுவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் புதிய கடை கட்டுவதில் மூர்த்தி மற்றும் முல்லைக்கு இடையே சிறிய மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்தது. அந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாக, இப்போது தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை சிறப்பாக கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் திட்டம் போட்டு வருகின்றனர்.
கண்ணம்மாவிற்கு உதவும் பாரதி, உச்சகட்ட கோபத்தில் வெண்பா – வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோ!!
இதற்கிடையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது தீபாவளி கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. பொதுவாக தீபாவளி கொண்டாட்டம் என்றாலே அது ஆட்டம் பாட்டம் என களை கட்டும். அதிலும் நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம் பற்றி சொல்லவா வேண்டும். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடைபெற்றுள்ள தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் நடிகர் ஸ்டாலின், வெங்கட், நடிகை ஹேமா, காவ்யா, கம்பம் மீனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
வயதில் சிறிய பையனை திருமணம் செய்து கொள்ளும் சூப்பர் சிங்கர் மாளவிகா – ரசிகர்கள் ஷாக்!
இது தொடர்பான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் அதனை வைரல் செய்து வருகின்றனர். வழக்கமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் எந்தவொரு நிகழ்விலும் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு வரும் நிலையில், இந்த நிகழ்வில் சிலர் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. அந்த வகையில் நடிகர் குமரனை இந்த கொண்டாட்டத்தில் மிஸ் செய்வதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.