கண்ணம்மாவிற்கு உதவும் பாரதி, உச்சகட்ட கோபத்தில் வெண்பா – வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோ!!

0
கண்ணம்மாவிற்கு உதவும் பாரதி, உச்சகட்ட கோபத்தில் வெண்பா - வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோ!!
கண்ணம்மாவிற்கு உதவும் பாரதி, உச்சகட்ட கோபத்தில் வெண்பா - வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோ!!
கண்ணம்மாவிற்கு உதவும் பாரதி, உச்சகட்ட கோபத்தில் வெண்பா – வெளியான லேட்டஸ்ட் ப்ரோமோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாரதி கண்ணம்மா சீரியல்

விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக ஹேமா பற்றிய உண்மைகளை கண்ணம்மா தெரிந்து கொள்கிறார். அதனால் தனது வீட்டிற்கு ஹேமாவை அழைத்து செல்ல பல வித காரணங்களை கூறுகிறார். அதே போல் பாரதி குடும்பத்தினர் பாரதிக்கு இந்த உண்மையை பற்றி தெரிவிக்க கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, வெண்பா எப்போதும் போலவே பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் பிரிப்பதற்கான வேலைகளை இறங்குகிறார்.

‘அண்ணாத்த’ படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கண்ணம்மா செல்லும் ஆட்டோ பஞ்சராகி விடுகிறது. இதனால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி தெரியாமல் அவர் ரோட்டில் நிற்கிறார். அப்போது அந்த வழியாக பாரதி மற்றும் ஹேமா இருவரும் வருகின்றனர். ஹேமா சமையல் அம்மாவிற்கு உதவ வேண்டும் என்று பாரதியிடம் கூறி அடம்பிடிக்கிறார். இதனால் பாரதி வேறு வழியில்லாமல் அவருக்கு உதவி செய்கிறார். அப்போது கண்ணம்மா வெண்பாவின் நம்பருக்கு தாங்கள் இருக்கும் அட்ரெஸை அனுப்புகிறார்.

செழியனால் உருவாகும் பிரச்சனை – முடிவுக்கு வருமா கோபியின் நாடகம்? வேகம் எடுக்கும் ‘பாக்கியலட்சுமி’ கதைக்களம்!

இதனால் பதறியடித்து கொண்டு வெண்பா வருகிறார். வெண்பா வந்ததும் கண்ணம்மா அவரை வெறுப்பேற்றுவது போல நடந்து கொள்கிறார். இதனால் கோபம் அடைந்து வெண்பா தடுக்க போகும் போது துளசி வந்து அவரை வழிமறிக்கிறார். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஏற்கனவே வாழ தொடங்கி விட்டார்கள் என்றும் அதனால் இருவரையும் வெண்பாவால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!