வயதில் சிறிய பையனை திருமணம் செய்து கொள்ளும் சூப்பர் சிங்கர் மாளவிகா – ரசிகர்கள் ஷாக்!

0
வயதில் சிறிய பையனை திருமணம் செய்து கொள்ளும் சூப்பர் சிங்கர் மாளவிகா - ரசிகர்கள் ஷாக்!
வயதில் சிறிய பையனை திருமணம் செய்து கொள்ளும் சூப்பர் சிங்கர் மாளவிகா - ரசிகர்கள் ஷாக்!
வயதில் சிறிய பையனை திருமணம் செய்து கொள்ளும் சூப்பர் சிங்கர் மாளவிகா – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும் அனைவரும் மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். அவ்வாறு பிரபலமடைந்த மாளவிகா தன்னை விட சிறியவரை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்துள்ளார்.

சூப்பர் சிங்கர்:

பட்டி தொட்டி எங்கும் இருக்கும் நல்ல பாடகர்களை சினிமாவிற்கும் அறிமுகம் செய்யும் நல்ல ரியாலிட்டி நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் இருக்கிறது. தற்போது 8 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அதில் பலர் சினிமாவில் நல்ல வாய்ப்பை பெற்றுள்ளனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் தான் மாளவிகா சுந்தர். இவருடைய பாடல் கேட்கவே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு வந்தது.

‘அண்ணாத்த’ படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

மேலும் மாளவிகா தமிழில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல் ஹிந்தியிலும் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப்போட்டி வரை சென்றார். ஆனால், மாளவிகா அதில் வெற்றி பெற முடியவில்லை. மாளவிகா விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃப் சாம்பியன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அவரு சில நாட்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் முடிந்ததாக தனது இன்ஸடாவில் பதிவிட்டார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதிலாக வினுஷா – ஏற்க மறுக்கும் ரசிகர்கள்! கடைசி எபிசோட் எப்போது?

தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மாளவிகா பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் கணவர் உங்களை விட வயதில் சிறியவரா? இல்லை நீங்கள் சிறியவரா? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மாளவிகா, என்னைவிட அவர் ஒரு வருடம் இளையவர், அவருக்கு முப்பத்தி இரண்டு வயது ஆகிறது என்று கூறியிருக்கிறார். இது பற்றி என்ன நினைக்கிறீங்க என மற்றொருவர் கேள்வி கேட்டதற்கு பெண்ணை விட பையன் வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை பிரச்சினை கிடையாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும். மரியாதை இருக்க வேண்டும் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!