கதிர் – முல்லை காதல் காட்சிகளுடன் வெளியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ – உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த கதிர் – முல்லை சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் புதிய ப்ரோமோ ஒன்றில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மக்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது சில முக்கியமான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை குடும்பம், பாசம், ஒற்றுமை, கோபம் என வழக்கமான கதைக்களத்துடன் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இனி குழந்தைகளை மையமாக வைத்து நகர இருக்கிறது. ஏற்கனவே தனத்தின் குழந்தையை அனைவரும் கொஞ்சுவதாகவும், தனது குழந்தை யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் மீனாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியுள்ளது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த வெண்பா இவர் தானா? ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த எண்ணம் வரும் நாட்களில் புதிய பிரச்சனையை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மறுபக்கத்தில் மக்கள் அதிகம் ரசிக்கக்கூடிய கதிர் – முல்லை சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் பல எபிசோடுகளாக வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பை தணிப்பதற்காக தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களத்தில் கதிர் – முல்லையின் காதல் காட்சிகள் இடம்பிடித்துள்ளது. அந்த வகையில் நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக இன்றும் கதிர் – முல்லையின் தனிப்பட்ட காட்சிகள் ப்ரோமோவாக வெளியாகி இருக்கிறது.
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவிற்கு வந்த நறுக் கமெண்ட் – இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியீடு!
அதில் முதல் நாள் இரவு, முல்லை தனக்கு குழந்தை வேண்டும் என கூறியதை சொல்லி கதிர் சிரிக்கிறார். பிறகு முல்லையின் கண்ணத்தை பிடித்து கோவக்காரக்கிளி என்று கதிர் கொஞ்சுவது போல வெளியான சில காட்சிகளை கண்ட ரசிகர்கள், கதிர் – முல்லையின் பேவரைட் ஆன ரிகம ரிகச music track போட்டிருக்கலாம், செம கியூட் இந்த ஜோடி, இவங்க கெமிஸ்ட்ரி வேற லெவல்ல இருக்கு, கோவக்காரக்கிளி டயலாக் சூப்பர் கதிர் என பதிவிட்டு தங்களது உற்சாகத்தை தெரிவித்து வருகின்றனர்.