‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அம்மா மற்றும் மகளின் புது ரீல்ஸ் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை சுஜிதா தனக்கு அம்மாவாக நடித்து வரும் நடிகையுடன் இணைந்து செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக முக்கியமான சீரியல்களில் ஒன்றாக கருதப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தற்போது தான் வழக்கமான பாணிக்கு திரும்பியுள்ளது. இருந்தாலும் கதையில் வேகம் இருக்க வேண்டும் என கருதிய இயக்குனர், மூர்த்தி குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை அவர்களின் எதிர் வீட்டுக்கு குடியேருவது போல செய்து கதையில் சற்று ஸ்வாரசியத்தை கூட்டியுள்ளார்.
நடிகை சமந்தா விவாகரத்திற்கு இது தான் காரணம் – முதன் முதலாக மனம் திறந்த தயாரிப்பாளர்!
இது தவிர சிறு சிறு கோளாறுகள் செய்து வரும் கஸ்தூரி, இந்த கதையில் ஒரு முக்கியமான வில்லியாக மாறியுள்ளார். அதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீண்டுமாக சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. என்றாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை பிரிக்க கஸ்தூரி செய்த திட்டம், வேறு வழியில் பயணித்து அவர்கள் குடும்பத்துடன் இணைவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என தெரிகிறது. அதை தான் ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா சீசன் 2” – வெளியான ப்ரோமோ!
இந்நிலையில் வழக்கம் போல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை சுஜிதா தனக்கு அம்மாவாக நடித்து வரும் நடிகையுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்துள்ளார். அதாவது சமீப காலமாக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாகவே நெனச்சிட்டு இருக்கல்ல’ என்ற வரிகளுக்கு இவர்களும் ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். வழக்கம் போல இந்த காணொளியும் தற்போது வைரலாகி வருகிறது.