‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஜீவாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன். அவருடைய சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெங்கட் ரங்கநாதன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூர்த்திக்கு தம்பியாக ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன். இவர் ஏற்கனவே TRP இல் முதலிடத்தில் இருக்கும் ‘சன் டிவி’ ரோஜா சீரியலில் நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில் அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் சொந்த ஊர் பழனி ஆகும். பழனியில் பள்ளி படிப்பை முடித்து பின்பு புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துள்ளார். சென்னைக்கு வேலை தேடி வந்தவர் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். முதலில் விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக அறிமுகமானார்.
இரட்டை குழந்தையை கண்டுபிடிக்க கண்ணம்மாவிற்கு உதவி செய்யும் பாரதி? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதன் பின் சன் மியூசிக்கில் விஜேவாக நான்கு ஆண்டுகள் பணியாற்றி வந்தார். மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் சன் டிவி ஆண் பாவம் தொடரில் நடித்தார். பிறகு ஜீ தமிழின் புகுந்த வீடு, ஜெயா டிவியின் மாயா போன்ற தொடர்களில் நடித்தார். அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வந்தாலும் வெங்கட்டிற்கு ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு விஜய் டிவியில் 2013-2017 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்திருந்தார். அதில் மக்களிடம் பிரபலமான அவருக்கு தொடர்ச்சியாக பல சீரியல் வாய்ப்புகள் வந்தது. ஜீ தமிழின் மெல்ல திறந்தது கதவு, விஜய் தொலைக்காட்சியின் நினைக்கத் தெரிந்த மனமே போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.
ஆனால் இந்த சீரியல்கள் கொடுக்காத ரீச் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வழங்கியது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கேரக்டரில் நடித்து வருகிறார். அண்ணன், தம்பி பாசம் & ஹேமாவுடனான காதல் என வெங்கட்டின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் வெங்கட். சமூக வலைத்தளங்களில் ஆர்வம் அதிகமாக இருக்கும் அவர் பல ரீலிஸ் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். 2019 ல் வெளியான திருமணம் என்னும் படத்தில் நடித்திருந்தார். பிறகு செய் படத்தில் நடித்தார். அதன்பிறகு குற்றம் 23 படத்தில் அருண் விஜய் உடன் நடித்துள்ளார்.