Reliance Jio vs BSNL வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3GB டேட்டா – முழு விபரம் இதோ!
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ மற்றும் BSNL நிறுவனத்தின் தினசரி 3GB டேட்டா குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சலுகைகள்:
ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் இன்டர்நெட் பயன்படுத்தும் விகிதம் அதிகமாகியுள்ளது. அதனை தொடர்ந்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை போட்டிபோட்டு கொண்டு வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது BSNL மற்றும் ஜியோ நிறுவனம் வழங்கும் சலுகைகள் குறித்த விவரத்தை கீழே காண்போம்.
ரூ. 3499 திட்டம்:
ஜியோ நிறுவனம் ரூ. 3499 திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3GB டேட்டா என 365 நாட்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் Jio Cinema, Jio Tv மற்றும் பல ஜியோ பயன்பாடுகளுக்கு மட்டும் இலவச அணுகல் வழங்கப்படுகிறது.
ரூ. 2399 திட்டம்:
BSNL நிறுவனம் ரூ. 2399 திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3GB டேட்டா என 425 நாட்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் அன்லிமிடெட் கால் செய்யும் வசதி மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து Eros Now ஓடிடி மற்றும் யூசர் காலர் ட்யூனை மாற்றுவதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது.
வித்யாசம்:
BSNL யூசர்கள் தங்களது தினசரி டாட்டா முடிந்ததும் 80 Kbps வேகத்தில் டேட்டா பயன்படுத்தலாம். ஜியோ யூசர்கள் டேட்டா அன்லிமிடெட் பூர்த்தி செய்த பிறகு 64Kbps வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.