TNPSC 991 வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்கள் – தேர்வு முடிவுகள் வெளியீடு !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Agricultural Officer மற்றும் Assistant Horticultural Officer எனப்படும் உதவி தோட்டக்கலை அலுவலர், Agricultural Officer (Extension), Assistant Director of Horticulture and Horticultural Officer ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPSC |
பிரிவின் பெயர் | Assistant Director of Horticulture, Horticultural Officer, Agricultural Officer, Assistant Horticultural Officer |
தேர்வு தேதி | 17 & 18 Apr |
CV Schedule | Download Below |
TNPSC AAO தேர்வு முடிவுகள்:
TNPSC தேர்வாணையம் மூலமாக Assistant Director of Horticulture, Horticultural Officer, Agricultural Officer, Assistant Horticultural Officer ஆகிய பதவிகளுக்கு இந்த வருட தொடக்கத்தில் தான் பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் இப்பதவிகளுக்கு பணியிட தேர்வுகள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி மொத்தம் 991 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பணியிடங்களுக்கு கடந்த 17.04.2021 மற்றும் 18.04.2021 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்த கட்டமாக Oral Test (interview) சோதனைக்கு அழைக்கப்படுவர். தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ள கீழே இரண்டு இணைய முகவரியினை வழங்கியுள்ளோம்.
TNPSC தேர்வு முடிவுகள் டவுன்லோட் செய்யும் முறை:
- முதலாவதாக, தேர்வர்கள் tnpsc.gov.in இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
- அதன் பிறகு அதிகாரப்பூர்வ வலைத்தள முகப்புப்பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவு (Latest Result) பகுதியைக் கண்டறியவும்.
- தேர்வு முடிவு இணைப்பைக் கண்டுபிடித்து பெயர் மற்றும் ரோல் எண்ணை கவனமாக நிரப்பவும்.
- சில விநாடிகளுக்குப் பிறகு கணினித் திரையில் தேர்வு முடிவு காண்பிக்கப்படும்
- இறுதியாக, எதிர்கால பயன்பாட்டிற்காக குறிப்புகளுக்கு முடிவின் அச்சு எடுக்கவும்.