திடீர் திருமணம் செய்த சன் டிவி சீரியல் நடிகை – புகைப்படங்கள் இதோ !
சன் டிவி சீரியல் நடிகை திடீர் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
சன் டிவி சீரியல் நடிகை:
சீரியல் என்றாலே நம் நினைவுக்கு வருவது சன் டிவிதான். சன் டிவி சீரியலுக்கு என இதுவரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் வெள்ளித்திரை நடிகையான அம்பிகா நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் இந்த சீரியலில் நடித்து இருந்தார்கள்.
மீராவை மருமகளாக ஏற்கும் யுவா குடும்பத்தினர், சந்தேகத்தில் மீரா – ‘கண்ணான கண்ணே’ ப்ரோமோ!
2020ஆம் ஆண்டு கொரோனா பெரும் தொற்று காரணமாக இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயின் உட்பட பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் நடிகைகள் மாற்றப்பட்டனர். இதனால் இந்த சீரியலின் சற்று சரிவடைந்தது என்றே கூறலாம். அதன் பின் இதன் கதையும் முற்றிலும் மாற்றப்பட்டது. இதன் காரணமாக விரைவாகவே இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.
ஹேமா, கண்ணம்மாவின் குழந்தை தான் என அறியும் பாரதி – சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்!
இந்த சீரியலின் ஹீரோவுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிகை பிரதீபா நடித்திருந்தார். இவர் அதில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தன் காதலனை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் குடும்பத்தினர் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதனை அவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.