ரீஎன்ட்ரி கொடுக்க உள்ள கரகாட்டக்காரன் பட நடிகை – அவரே வெளியிட்ட வீடியோ!
தமிழ் திரையுலகில் 90’ஸ்களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை கனகா. 30 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காத அவர், மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளதாக சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகை கனகா:
தென்னிந்திய திரைப்பட நடிகையான கனகா நடிகை தேவிகாவின் மகள் ஆவார். இவர் 1989-ஆம் ஆண்டில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை தேவதாசு, இவரும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை கனகா ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் குறித்த சீக்ரெட் தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
2007 இல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணம் முடிந்து 15 நாள் கழித்து அவர் காணவில்லை. பிப்ரவரி 6, 2010 வரை அவரைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பேசியுள்ளார். நான் நடிக்க வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நாகர்ஜுன் வாங்கும் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
சில காரணங்களால் இடையில் நடிக்கவில்லை. இப்போது எனக்கு 50 வயது ஆகிறது. தற்போதைய சினிமாவின் போக்கு மாறி இருக்கிறது. ஒப்பனை, சிகை அலங்காரம், துணி, மணிகள், செருப்பு, நகை, பேசுவது, சிரிப்பது எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. நான் ஏற்கனவே நடித்த மாதிரி நடித்தால் பழைய மாதிரி இருக்கிறது என்பார்கள். மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதால் சினிமாவின் புதிய நுட்பங்களை கற்று வருகிறேன். எனக்கு மன உறுதி இருப்பதால் விரைவில் கற்றுக்கொள்வேன் என பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.