ICC டெஸ்ட் தரவரிசை பட்டியல் – கேஎல் ராகுல், சிராஜ் முன்னேற்றம்!
கடந்த திங்கள் கிழமை முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையேயான போட்டியில் சிறப்பாக விளையாடியதால் சிராஜ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தரவரிசையில் பட்டியலில் முன்னேறி உள்ளனர்.
டெஸ்ட் போட்டிகள்
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது. கொரோனா பரவலின் காரணமாக குறைந்த அளவு ரசிகர்கள் மட்டுமே போட்டிகளை காண அனுமதிக்கப்பட்டனர். 2வது டெஸ்ட் போட்டிகள் கடந்த திங்கள்கிழமை முடிவடைந்தது. இந்த போட்டிகளில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அபாரமாக விளையாடினர் என்று தான் கூற வேண்டும். இருவருமே அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான பங்கினை ஆற்றினர்.
தமிழகத்தில் மின்சாரம், குடிநீர் கட்டணம் அதிகரிப்பு? மாற்று வழி உண்டு!
இப்படியான நிலையில் தற்போது ஐசிசி தற்போது முடிந்துள்ள டெஸ்ட் போட்டிகள் வரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சிற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் சிராஜ் பந்துவீச்சுக்கான தரவரிசை பட்டியலில் உச்சகட்டமாக 18 இடங்கள் முன்னேறி தற்போது 38வது இடத்தினை பிடித்துள்ளார். அதே போல் பேட்டிங்குக்கான தரவரிசை பட்டியலில் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 19 இடங்கள் முன்னேறி தற்போது 37வது இடத்தினை பிடித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தற்போது இருவருக்கும் அனைவரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அதே போல் நடந்து முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் விளையாடிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்குக்கான தரவரிசை பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி தற்போது இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். முதல் இடத்தினை நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் தக்க வைத்து உள்ளார். வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் இருவருக்கும் வெறும் 8 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.