சென்னை மெட்ரோ ரயில் கழக வேலைவாய்ப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு General Manager (Track)/ Additional General Manager (Track) பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CMRL |
பணியின் பெயர் | General Manager (Track)/ Additional General Manager (Track) |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 07.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு :
CMRL கழகத்தில் General Manager (Track)/ Additional General Manager (Track) பணிகளுக்கு என 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
AGM வயது வரம்பு :
பதிவு செய்வோர் 06.08.2021 தேதியில் அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டூம்.
TN Job “FB Group” Join Now
CMRL கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Civil Engineering பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் SAG / SG பிரிவு பணிகளில் 17 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
CMRL தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் தேர்வு, நேர்காணல் அல்லாமல் deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 07.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.