SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் சேவைகள் நிறுத்தம்!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதால் அதன் டிஜிட்டல் சேவைகளை சில மணிநேரங்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
வங்கி சேவைகள்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் பல வகையான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் வீடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தவிர வயது முதிர்ந்தவர்களுக்கான சில சேவைகளை வீடு தேடி சென்று கொடுத்து வருகிறது.
மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்நிலையில் டிஜிட்டல் சேவைகளின் போது பயனர்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களை கருத்தில் கொண்டு அவற்றை தடுக்க பராமரிப்பு பணிகளை செய்ய உள்ளது. இதன் காரணமாக SBI வங்கியின் டிஜிட்டல் சேவைகள் சில மணி நேரங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது SBI வங்கியின் டிஜிட்டல் தளங்களான யோனோ, யோனோ லைட், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் யோனோ பிசினஸ் உள்ளிட்டவை ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை, அதாவது இரவு 11.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.45 மணி வரை நிறுத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
அதனால் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரங்களில் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாது என்று SBI வங்கி ட்வீட் செய்துள்ளது. அதாவது ஒரு சிறந்த வங்கி அனுபவத்தை வழங்க பாடுபடுவதால் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் எங்களுடன் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது. இது தவிர புதிய வாடிக்கையாளர்களை டிஜிட்டல் மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிம் பைண்டிங் வசதியுடன், YONO மற்றும் YONO Lite சேவைகள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களின் சிம் வைத்திருக்கும் சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் என அறிவித்துள்ளது.